தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி – நயினார் நாகேந்திரன் கருத்து!

தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீபம் ஏற்றப்படும் நிகழ்வைக் காண்பதற்காகவே தாங்கள் அங்கு செல்ல உள்ளதாகவும், இதற்கு பின்னால் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேபோல், தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மற்ற பக்தர்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட நயினார் நாகேந்திரன், பக்தர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)