சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆதரவு – தங்கம் தென்னரசு விளக்கம்!

தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆதரவு – தங்கம் தென்னரசு விளக்கம்!


தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, எண்ணிக்கை குறையக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திமுக வலியுறுத்திய அம்சங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உரிய முடிவை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் மாநிலத்திற்குப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.