வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழக அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம்! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை... சட்டமன்றம் சென்ற திரை நட்சத்திரங்கள்!

தமிழக அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம்! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை... சட்டமன்றம் சென்ற திரை நட்சத்திரங்கள்!

தமிழக அரசியலுக்கும் திரையுலகிற்கும் இடையிலான தொடர்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற பல நடிகர்கள், பின்னர் அரசியலில் நுழைந்து தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாகவும் உயர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முதலாக நடிகர் எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானது, இந்தப் பயணத்தில் முக்கியமான நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது.

 

அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்று அரசியலில் தனித்த அடையாளத்தைப் பதித்தனர். அதேபோல், நடிகர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். நெப்போலியன், சரத்குமார், டி.ராஜேந்தர், கருணாஸ் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.

 

இந்தப் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். திரையுலகில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியல் களத்தில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகி வருவது, தமிழக அரசியலில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் தொடர்பை வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.