வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க.. இந்த 2 விஷயங்களை செய்தால் போதும்!

மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க.. இந்த 2 விஷயங்களை செய்தால் போதும்!

வீட்டில் வளர்க்கும் மல்லிகைச் செடி அதிகமாகப் படர்ந்து, கிளைகள் அடர்த்தியாக வளர்ந்து பூக்கள் குறைவாக பூக்கிறதா? செடியை முறையாக கவாத்து செய்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சியை சீரமைத்து அதிக பூக்கள் பெற உதவும்.

 

மல்லிகை பூத்து முடிந்ததும், அதன் நுனிக் கிளைகளை வெட்டி கவாத்து செய்வது அவசியம். இவ்வாறு வெட்டுவதால் செடி கட்டுப்பாடின்றி காடு போல வளர்வதைத் தடுக்கலாம். புதிய தளிர்கள் உருவாகி வளரும்போது அவற்றில் பூ மொட்டுகள் தோன்றுவதால், சரியான முறையில் கவாத்து செய்வது பூக்கள் அதிகம் பூக்க உதவுகிறது.

 

அதேபோல், மல்லிகை செடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தலாம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் அல்லது கடைகளில் கிடைக்கும் திரவ, திட வடிவ ஜீவாமிர்தத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

 

திரவ ஜீவாமிர்தத்தை பொதுவாக 1:10 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றலாம். தொடர்ந்து சரியான பராமரிப்பு, கவாத்து மற்றும் இயற்கை உரமிடுதல் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தால் மல்லிகை செடி ஆரோக்கியமாக வளர்ந்து அதிக பூக்களை கொடுக்க உதவும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.