தஞ்சாவூரில் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக காவல் ஆய்வாளர் கைது – சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சரவணனை மிரட்டி, ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர் சுகுமாரனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்தி, அதில் தலையிட்டு சரவணனை மிரட்டி சுகுமார் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், காவல் ஆய்வாளர் சுகுமாரனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் (0)
இந்தச் செய்திக்குக் கருத்துகள் முடக்கப்பட்டுள்ளன.