பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து பாலியல் தொல்லை – வடமாநிலத் தொழிலாளி கைது!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ராமகிருஷ்ண மோண்டல் என்ற வடமாநிலத் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அருகில் சென்ற ராமகிருஷ்ண மோண்டல், பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
மயக்கம் தெளிந்த பின்னர் அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவிநாசிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான ராமகிருஷ்ண மோண்டலைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கருத்துகள் (0)
இந்தச் செய்திக்குக் கருத்துகள் முடக்கப்பட்டுள்ளன.