சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தனியார் பேருந்து மோதி இளம்பெண் பரிதாப பலி!..

தனியார் பேருந்து மோதி இளம்பெண் பரிதாப பலி!..

கேரளாவின் கோட்டயத்தில் நேற்று மாலை தனியார் பேருந்து நடைபாதையில் தறிகெட்டு ஓடியதில், 19 வயது இளம்பெண் அஞ்சலி அஜய் உயிரிழந்தார். கோட்டயத்திலிருந்து சங்ஙனாச்சேரிக்குச் சென்ற பேருந்து அதிவேகமாகச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த அஞ்சலி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த அஞ்சலி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.