வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்.. தூய தங்கத்தை கண்டறியும் இயந்திரத்திலும் சிக்காத அதிர்ச்சி தகவல்!

தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்.. தூய தங்கத்தை கண்டறியும் இயந்திரத்திலும் சிக்காத அதிர்ச்சி தகவல்!

தங்க நகைகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நகைகள் தயாரிப்பில் ரீனியம் என்ற உலோகம் கலக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலோகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நகைகள், 100 சதவீதம் சுத்தமான தங்கத்தைப் போலவே தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்த முறையில் நடைபெறுவதாகக் கூறப்படும் கலப்படம் குறித்து முன்னணி இந்தி நாளிதழான தினிக் பாஸ்கர் செய்தி வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. மேலும், தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில்கூட ரீனியம் கலந்திருப்பதை எளிதில் கண்டறிய முடியவில்லை என்ற தகவல் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், நகைகளின் உண்மையான தரத்தை உறுதிப்படுத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.97,720-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், நகைகளை வாங்கும்போது அதன் தரம், ஹால்மார்க் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.