இரவில் நன்றாக தூங்கியும் பகலில் தூக்கம் வருகிறதா? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

இரவு போதுமான நேரம் தூங்கிய பிறகும் பகலில் தூக்க உணர்வு, சோர்வு அல்லது உடல் மந்தமாக இருப்பது பலருக்கும் ஏற்படும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தூக்கமின்மை மட்டுமின்றி, உடலில் ஏற்படும் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல்நல பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம்.
வைட்டமின் டி குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது, ரத்தசோகை மற்றும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை நாள் முழுவதும் சோர்வாக உணரச் செய்யலாம். அதேபோல், மதிய நேரத்தில் அதிகமாக உணவு உட்கொள்வது செரிமானத்திற்காக உடல் செயல்படுவதால் தூக்க உணர்வை அதிகரிக்கலாம். உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றங்களும் மதிய நேர மந்தநிலைக்கு காரணமாக இருக்கலாம்.
இதனைத் தவிர்க்க, உணவை அளவோடு எடுத்துக்கொள்வது, தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். பகல் நேர தூக்கம் மற்றும் சோர்வு தொடர்ந்து நீடித்தால், அதன் காரணத்தை கண்டறிய மருத்துவரை அணுகுவது அவசியம்.




கருத்துகள் (0)