தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 குறைவு; 6 நாட்களில் ரூ.5,720 சரிவு!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவது நகை வாங்கத் திட்டமிடும் மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில், இன்று (நவம்பர் 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,920க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,00,320 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், கிராமுக்கு ரூ.75 சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ரூ.12,615க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.12,540க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு மொத்தம் ரூ.5,720 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை கணிசமாகச் சரிந்துள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 சரிவு ஏற்பட்டுள்ளதால், தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி என இரண்டின் விலையும் ஒரே நாளில் குறைந்திருப்பது நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)