டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனில் முக்கிய நிர்வாக மாற்றம்! தலைவர் பதவியிலிருந்து நோயல் டாடா ஓய்வு – புதிய தலைவர் நியமனம்!

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிர்வாக ரீதியாக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் இருந்து வந்த நோயல் என். டாடா, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை எட்டியதைத் தொடர்ந்து தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.
டாடா குழுமத்தின் நிர்வாக வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, கடந்த நவம்பர் 11ஆம் தேதி நோயல் டாடா தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நவம்பர் 12ஆம் தேதி முதல் அவருக்கு 'சேர்மன் எமெரிட்டஸ்' (Chairman Emeritus) என்ற கௌரவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் புதிய தலைவராக பஹ்ராம் வகிலை நியமிக்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனமும் நவம்பர் 12ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நோயல் டாடா கௌரவப் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை இனி பஹ்ராம் வகில் கவனிக்க உள்ளார்.




கருத்துகள் (0)