ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

 

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 25) நடைபெற்ற ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, தீபாவளி பண்டிகையின்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களையும், உள்ளூர் கைவினைஞர்களின் தயாரிப்புகளையும் மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், உள்ளூர் தொழில்களும் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும், ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ கொள்கையை மக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும், தூய்மைப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். பண்டிகைக் காலத்தில் உள்நாட்டுப் பொருட்களைத் தேர்வு செய்வதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்கலாம் என அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.