திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
இந்தியா

எச்சில் உமிழ்ந்தபோது மின்சாரம் தாக்கி 65 வயது முதியவர் உயிரிழப்பு!

எச்சில் உமிழ்ந்தபோது மின்சாரம் தாக்கி 65 வயது முதியவர் உயிரிழப்பு!

 

 

மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஜ்பசோடாவில் வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் நின்றிருந்த பிரபுலால் குப்தா (65) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் குட்கா மென்றுவிட்டு எச்சில் உமிழ்ந்தபோது, அது அருகில் சென்ற 11 கே.வி. உயர் மின்னழுத்த மின்கம்பியில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மின்சாரத் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.