புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திருச்சி கிழக்குத் தொகுதியில் த்ரிஷாவை வேட்பாளராக்க தவெக தலைமைக்கு அழுத்தம்?

திருச்சி கிழக்குத் தொகுதியில் த்ரிஷாவை வேட்பாளராக்க தவெக தலைமைக்கு அழுத்தம்?

 

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகை த்ரிஷாவைப் போட்டியிடச் செய்ய வேண்டும் எனக் கட்சிக்குள் சிலர் தலைமைக்கு வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில், தொகுதிக்குள் ரகசியமாகப் பிரச்சாரப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேவாலயங்கள் வழியாக ஆதரவு திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, த்ரிஷாவை நேரடியாகச் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்குவதற்குப் பதிலாக, 2028ஆம் ஆண்டு காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடச் செய்து நாடாளுமன்ற உறுப்பினராக்கலாம் என்ற மற்றொரு யோசனையும் கட்சித் தலைமையிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், த்ரிஷாவின் அரசியல் களமிறக்கம் குறித்து தவெக வட்டாரத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து கட்சித் தலைமை தரப்பிலிருந்தோ, நடிகை த்ரிஷா தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.