திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி.. 22 நாட்களாகியும் கிடைக்காத துப்பு!

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி.. 22 நாட்களாகியும் கிடைக்காத துப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக 22 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் விசாரணையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், கடந்த 12 நாட்களாக சந்தேகத்தின் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

இருப்பினும், சிறுமி தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவர் காணாமல் போனதற்கான காரணம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.