புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருமணம் குறித்து கேட்ட காதலிக்கு நேர்ந்த சோகம்.. 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

திருமணம் குறித்து கேட்ட காதலிக்கு நேர்ந்த சோகம்.. 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

சென்னை சோழிங்கநல்லூரில் காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பர்வீன் (24) என்பவர், வருண் பாலாஜி (31) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நீண்ட காலமாகப் பழகி வந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து பர்வீன் காதலரிடம் கேட்டுள்ளார்.

 

ஆனால், திருமணம் தொடர்பான அவரது கேள்விக்கு வருண் பாலாஜி எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பர்வீன், தான் வசித்து வந்த குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலன் வருண் பாலாஜியைக் கைது செய்துள்ளனர். அவரிடம் சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.