புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்திற்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.. 5 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம்!

தமிழகத்திற்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.. 5 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம்!

தமிழகத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்வாரியம் பல்வேறு வழிகளில் மின்சாரத்தைப் பெற்று வருகிறது. மாநிலத்திற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையே, கூடுதல் மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான புதிய நடவடிக்கையை தமிழக மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், அதிக விலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, நடுத்தர கால ஒப்பந்த முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதன்படி, மொத்தம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்காக மின்வாரியம் தற்போது டெண்டர் கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து இந்த மின்சாரத்தைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மின்சாரத் தேவையைத் திட்டமிட்டு பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.