திருப்பதி அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் பக்தர்களுக்கு உணவு வழங்கும் அன்ன பிரசாத திட்டத்திற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த கோடாலி ஸ்ரீகாந்த் என்ற பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடியை நன்கொடையாக வழங்கி கவனம் பெற்றுள்ளார். இதற்கான காசோலையை திருமலையில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது, தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் நேரடியாக வழங்கினார்.
அன்னதான சேவைக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய பக்தரின் பங்களிப்பை தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டினர். இந்த நிதி மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் அன்ன பிரசாத அறக்கட்டளையின் சேவைகளுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.




கருத்துகள் (0)