பழனி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்; அசுரர்களின் உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) மாலை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விழாவில் பயன்படுத்தப்பட உள்ள அசுரர்களின் உருவ பொம்மைகளை உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய நான்கு அசுரர்களின் உருவ பொம்மைகள் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உருவ பொம்மைகளைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தயாரிப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, அவற்றை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.




கருத்துகள் (0)