திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
சமையல்

உருளைக்கிழங்கு இருந்தால் போதும்! தீபாவளிக்கு வீட்டிலேயே சுவையான குலாப் ஜாமூன் செய்யலாம்!

உருளைக்கிழங்கு இருந்தால் போதும்! தீபாவளிக்கு வீட்டிலேயே சுவையான குலாப் ஜாமூன் செய்யலாம்!

 

 

தீபாவளி பண்டிகைக்கு வீட்டிலேயே வித்தியாசமான இனிப்பு தயாரிக்க நினைப்பவர்களுக்கு உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் நல்ல தேர்வாக இருக்கும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஜாமூன் மிக்ஸ் இல்லாமலேயே, சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இந்த இனிப்பைத் தயாரிக்கலாம். மென்மையான உருண்டைகளுடன் சர்க்கரைப் பாகின் இனிப்பும் சேரும்போது சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.

 

தேவையான பொருட்கள்: ஒரு நடுத்தர உருளைக்கிழங்கு, 2 டேபிள்ஸ்பூன் மைதா அல்லது கோதுமை மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர், அரை டீஸ்பூன் நெய் ஆகியவை ஜாமூன் தயாரிக்கத் தேவைப்படும். சர்க்கரைப் பாகு தயாரிக்க ஒரு கப் சர்க்கரை, அரை கப் தண்ணீர், இரண்டு ஏலக்காய், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் சில துளிகள் ரோஸ் எசென்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

 

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோலை நீக்கி கட்டிகள் இல்லாமல் மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், நெய் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். மாவை அதிகமாக அழுத்திப் பிசையாமல், சிறிய உருண்டைகளாக விரிசல் இல்லாமல் உருட்டிக்கொள்ள வேண்டும்.

 

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்துச் சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு சர்க்கரைப் பாகைத் தயாரிக்கவும். பின்னர் உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்க வேண்டும். அவற்றைத் தயாராக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போட்டு, இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவிட்டால் சுவையான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் தயார். தீபாவளி விருந்தில் குடும்பத்தினருடன் பகிர்ந்து சுவைக்க ஏற்ற இனிப்பு இது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.