பேச்சுலர்களுக்கான காரசாரமான இறால் மசாலா – எளிய செய்முறை!

குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுவையான இறால் மசாலாவை எளிதாகத் தயாரிக்கலாம். முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் தேவையான மசாலாப் பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கி, ஆறியதும் அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த இறாலையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
இறால் மசாலாவுடன் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். மசாலா நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில், நறுக்கிய மல்லித்தழை மற்றும் புதினா இலைகளைத் தூவி இறக்கலாம். காரசாரமான இந்த இறால் மசாலா சூடான சாதம், சப்பாத்தி அல்லது தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.




கருத்துகள் (0)