வங்கக்கடலில் உருவான அக்வான் புயல்: ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அக்வான் புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் தொடர்ந்து வலுவடைந்து நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நாளை மாலை தீவிரப் புயலாகவும், வரும் 19ஆம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் முதல் துணி வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தாக்கத்தை முன்னிட்டு தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு மற்றும் தீவிரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், கடலோரப் பகுதிகளில் வானிலை நிலவரத்தைப் பொதுமக்கள் கவனித்து வருவது அவசியமாகும்.




கருத்துகள் (0)