செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!

வங்கக்கடலில் அக்வான் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் புயல், நாளை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலின் நகர்வு மற்றும் தீவிரம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், கடலோரப் பகுதிகளில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் தொடர்பான அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.