வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

வங்கிக் கணக்கு இல்லையா? இனி ரொக்கமாக ரூ.50,000 வரை NEFT மூலம் பணம் அனுப்பலாம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிக் கணக்கு இல்லையா? இனி ரொக்கமாக ரூ.50,000 வரை NEFT மூலம் பணம் அனுப்பலாம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் வங்கிக் கிளைக்குச் சென்று ரொக்கப் பணத்தைச் செலுத்தி, NEFT பணப் பரிமாற்ற வசதி மூலம் மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கும் வங்கி வழியாகப் பணம் அனுப்பும் வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை ரொக்கமாகச் செலுத்தி மற்றொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப முடியும். பணம் அனுப்புபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், செல்போன் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை வங்கிகள் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த முறையில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களை வங்கிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட வங்கிக் கிளையின் மூலம் பிறருக்குப் பணம் அனுப்ப உதவும் வகையில் இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.