பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இளம்பெண்கள் இருவர் லாரி மோதி பலி – ஹல்தி சடங்குக்குப் பதிலாக இறுதிச் சடங்கு செய்யும் அவலம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தீபாஞ்சலி நகரில், திருமண அழைப்பிதழ் வழங்கச் சென்ற மென்பொருள் பொறியாளர் சிந்துஸ்ரீ (29) மற்றும் அவரது உறவினரான வித்யா (19) ஆகிய இருவரும் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் திருமண மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய குடும்பம், தற்போது பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. திருமணத்திற்கு முன்பாக நடைபெற வேண்டிய ஹல்தி சடங்கிற்குப் பதிலாக, மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிந்துஸ்ரீயின் தந்தை நஞ்சுண்டப்பா கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் இல்லாததே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருமணக் கனவுகளுடன் சென்ற இரு இளம் உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)