வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 25 வரை அவகாசம் நீட்டிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 25 வரை அவகாசம் நீட்டிப்பு!

 

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும், 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 முதல் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 25, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.