ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
அரசியல்

வி.எஸ். பாபு உடல்நிலையில் முன்னேற்றம்; அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

வி.எஸ். பாபு உடல்நிலையில் முன்னேற்றம்; அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.எஸ். பாபுவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகக் கூறினார். மேலும், அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், குணமடையும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அமைச்சர் மரிய வில்சன் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.