ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
அரசியல்

2009-லேயே விஜய்க்கு காங்கிரஸ் பதவி வழங்க பரிந்துரைத்தேன்.. கே.வி.தங்கபாலு தகவல்!

2009-லேயே விஜய்க்கு காங்கிரஸ் பதவி வழங்க பரிந்துரைத்தேன்.. கே.வி.தங்கபாலு தகவல்!

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய், கடந்த 2009-ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். அப்போது விஜய், ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் என்று தான் பரிந்துரை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

 

மேலும், விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்காக தனது தலைவர் பதவியைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக தேசியத் தலைமையிடம் தெரிவித்ததாக தங்கபாலு குறிப்பிட்டுள்ளார். விஜய்க்கு அரசியல் பொறுப்பு வழங்குவது தொடர்பாக அப்போதே தான் ஆதரவு தெரிவித்ததாகவும் அவரது கருத்து அமைந்துள்ளது.

 

விஜய் நீண்டகாலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் கொண்டிருந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் கே.வி.தங்கபாலு தனது பழைய அனுபவங்களையும், அப்போது நடைபெற்ற ஆலோசனைகளையும் தற்போது பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.