விடுமுறையில் இருந்தாலும் மின்னஞ்சல்களுக்கு தானாக பதில் அனுப்பலாம்; ஜிமெயிலில் உள்ள எளிய வசதி இதோ!

அலுவலகப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டிருக்கும்போதோ அல்லது விடுமுறையில் இருக்கும்போதோ தொடர்ந்து வரும் மின்னஞ்சல்களுக்கு உடனடியாகப் பதிலளிக்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு உதவும் வகையில் ஜிமெயிலில் தானியங்கி பதில் அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஜிமெயிலில் உள்ள 'Vacation Responder' என்ற சிறப்பு அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கும் பதில் தானாகவே சென்றடையும். இதனால் நீங்கள் அலுவலகப் பணிகளில் பிஸியாக இருந்தாலும் அல்லது விடுமுறையில் இருந்தாலும், மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு உங்கள் நிலையைத் தெரிவிக்க முடியும்.
இந்த வசதியைச் செயல்படுத்த முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கைத் திறந்து Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு 'Vacation Responder' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, தானாக அனுப்ப வேண்டிய செய்தியைப் பதிவு செய்ய வேண்டும். தேவையான கால அளவையும் அமைத்து வசதியைச் செயல்படுத்தலாம்.
இதன் மூலம் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் தனித்தனியாகப் பதில் எழுத வேண்டிய அவசியமின்றி, உங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு தானாகவே தகவல் சென்றடையும். அலுவலகப் பணிகள் மற்றும் தனிப்பட்ட விடுமுறை நேரங்களில் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.




கருத்துகள் (0)