புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

குடும்பச் சொத்துகளில் சம பங்கு கோரி தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி வேணு!

குடும்பச் சொத்துகளில் சம பங்கு கோரி தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி வேணு!

TVS குழுமத் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, குடும்பச் சொத்துகளில் தனக்குச் சமமான பங்கு வழங்க வேண்டும் எனக் கோரி தனது தந்தைக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்துறை மற்றும் வணிக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, குடும்பச் சொத்துகளில் மகள்களுக்கும் மகன்களுக்கு இணையான உரிமை இருப்பதாக லட்சுமி வேணு தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், குடும்பத்துக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் உள்ள பங்குகளை உரிய முறையில் பிரித்துத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

குறிப்பாக, TVS Holdings, TVS Motors, TVS Credit Services மற்றும் சுந்தரம் கிளேட்டன் உள்ளிட்ட நிறுவனங்களில் குடும்பத்துக்கு இருக்கும் பங்குகளைப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் சொத்துப் பகிர்வு தொடர்பான இந்தக் கோரிக்கை சட்டப்பூர்வ நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு அவரது தாயார் மல்லிகா சீனிவாசனும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சொத்துகளில் சம உரிமை கோரி தந்தைக்கு மகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.