கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
“அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல” என தெரிவித்த அவர், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறினார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமுதன் கொலைக்கு போதைப்பொருள் தொடர்பான காரணம் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.




