சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொலை வழக்கை, ஆடையில் இருந்த சிறிய பார்கோடு க்ளூ மூலம் போலீசார் துப்பறிந்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பதும், அவரது இரண்டாவது மனைவி ரோகிமா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப் ஆகிய இருவருமே சேர்ந்து திட்டமிட்டு இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.




