சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

 

 

தர்மபுரி நத்தள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை அவரது 2-வது மனைவி சங்கவி இரும்புக் குழாயால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சங்கவிக்கு ஏற்பட்ட கருக்கலைவுக்கு தங்கராஜ்தான் காரணம் என சாமியார் ஒருவர் கூறியதாகவும், மேலும் தங்கராஜ் வேறொரு பெண்ணுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த சங்கவி, தனது சகோதரியுடன் சேர்ந்து தங்கராஜை இரும்புக் குழாயால் தாக்கியதாக தெரிகிறது.

 

தாக்குதலில் பலத்த காயமடைந்து மயங்கிய தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Read Next

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular