அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுக உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்த விவாதத்தின்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கார் வேண்டாம் எனக் கூறும் உதயநிதி அரசு பங்களாவில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான தகுதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் இருப்பதாக விளக்கினர். அந்த அடிப்படையில் உதயநிதிக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருப்பது அரசின் நடைமுறை மற்றும் புரோட்டோகால் சார்ந்தது என்றும் தெரிவித்தனர்.




