குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் பேருந்து பணிமனையில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பெற்றோருடன் வசித்து வந்த திவியேஷ் ரத்வா என்ற சிறுவன், சம்பவத்தன்று கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் கதவில் கழுத்து சிக்கியதாக தெரிகிறது.
இதைக் கவனித்த உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சிறுவன் பேருந்தின் கதவில் சிக்கித் தவிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பேருந்தின் கதவை சிறுவன் எவ்வாறு இயக்கினார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Un niño de siete años llamado Divyesh Rathwa murió en las afueras de Vadodara, Gujarat (India), tras quedar atrapado en la puerta hidráulica de un autobús estacionado en un taller.
Había salido a comprar y en su intento de ingresar, quedó atascado en la puerta hasta que dos… pic.twitter.com/3KOXdbYmsU
— Anxious Vids🔥 (@Anxiousvids) August 20, 2026




