எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: பாமக எம்.எல்.ஏ. புதிய நிலைப்பாடு!

 

சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார், கார், எரிபொருள் செலவு மற்றும் உதவியாளர் வழங்கப்படுவதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தனது கருத்தை மாற்றி பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கலாம் என்றும், தங்களுக்கு அரசு கார் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான வசதி வழங்குவதற்குப் பதிலாக, உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகை சென்றடைய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

Read Previous

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: மாணிக்கம் தாகூர் நம்பிக்கை!

Read Next

அரசு கார் விவகாரம்: உதயநிதிக்கு அரசு பங்களா ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular