ஆதாரில் உள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ‘மை ஆதார்’ இணையதளம் அல்லது ‘எம்-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையங்களில் வரும் மார்ச் மாதத்திற்குள் இலவசமாக புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.




