தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா காதலித்த இளைஞர் அஜித்குமாரால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஜித்குமாரை, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தற்போது சரணடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




