11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

 

 

தமிழகத்தில் என்ரிகா மதுபான நிறுவனம் தயாரித்த 11 வகை மதுபானங்களில் செயற்கை செறிவூட்டல் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.

 

ஆனால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, பின்னர் குறுகிய காலத்திலேயே அந்த உத்தரவு ஏன் திரும்பப் பெறப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 

மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாகுண்ட ராகவ ரெட்டி, டெல்லி மதுபான முறைகேடு வழக்குடன் தொடர்புடையவர் என்றும், ‘சவுத் குரூப்’ எனக் குறிப்பிடப்படும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ள நிலையில், மதுபான விற்பனை மற்றும் தரக் கட்டுப்பாடு தொடர்பான விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Read Previous

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “மனித உரிமை மீறல்!” – பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்!

Read Next

“திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்!” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular