கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வந்த ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஜன.17) நடைபெற்ற இறுதி சுற்று படப்பிடிப்பில், கடுமையான போட்டிக்கு இடையே சபரி 2-ம் இடத்தையும், விக்ரம் மற்றும் அரோரோ முறையே அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர். சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற திவ்யா கணேஷ் வெற்றி பெற்றதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.




