கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல KFC உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பர்கரில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாக வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி, உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




