மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயருமா? தவெக அமைச்சர்கள் உறுதி!

 

 

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்றும், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனிடையே, விரைவில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனால், விரைவில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது எதிர்பார்ப்பாகவே உள்ளது.

Read Previous

பிரமிக்க வைக்கும் ‘லயன் நெபுலா’ புகைப்படம்! நாசா வெளியிட்ட அற்புத காட்சி!

Read Next

சியா விதைகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular