ஈரோட்டில் 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் எஞ்சின் பணிமனையில் இருந்து மாற்றும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகயை மேற்கொண்டு வருகின்றனர்.




