7 நாட்கள் 1 டம்ளர் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்: உடலில் ஏற்படும் அற்புதம்..!!

Oplus_131072

இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. எனவே 7 நாட்கள் தொடர்ந்து 1 டம்ளர் இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகிறது.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள் போன்ற காரமான உட்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இஞ்சி ஜூஸ் குடிப்பதால், அது வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் அளிப்பதுடன், இரைப்பை குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
இஞ்சி உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, சீராக பராமரிப்பதுடன், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இஞ்சியில் வலி நிவாரணி பொருட்கள் அதிகமாக உள்ளதால், அது நாள்பட்ட மூட்டு வலி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இஞ்சி ஜூஸ் தயாரிப்பது எப்படி?

இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.

Read Previous

அரிசி பாயாசம் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

மயிலாடுதுறை கதம்ப சாம்பார் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular