ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பெண் குழந்தைகளுக்கான இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலிபான்களின் இந்த நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 24 லட்சம் பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




