வெள்ளி, நவம்பர் 20, 2026
உண்மையின் குரல்
இந்தியா

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக லிஃப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்த தடை.. மகாராஷ்டிர அரசு அதிரடி உத்தரவு!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக லிஃப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்த தடை.. மகாராஷ்டிர அரசு அதிரடி உத்தரவு!

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெரியவர்கள் துணையின்றி லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்த மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டை அனைத்து கட்டிட வளாகங்கள் மற்றும் நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தும்போது குழந்தைகள் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளில் சிக்கும் அபாயம் இருப்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது துணையின்றி இந்த வசதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 

அரசின் உத்தரவை மீறி குழந்தைகளைத் தனியாகப் பயன்படுத்த அனுமதிக்கும் கட்டிட வளாகங்கள் அல்லது நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட லிஃப்ட் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.