சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பார்பிக்யூ தீ விபத்தில் படுகாயமடைந்த புதுமணப்பெண் உயிரிழப்பு!

பார்பிக்யூ தீ விபத்தில் படுகாயமடைந்த புதுமணப்பெண் உயிரிழப்பு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே உள்ள சிடோங்கில், ஹோம்ஸ்டே ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புதுமணப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சோப்ரா பகுதியைச் சேர்ந்த சமீர் தாஸ் என்பவரை திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிகிதா சாஹா, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினார். அங்கு பார்பிக்யூ தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதில் நிகிதா பலத்த தீக்காயமடைந்தார்.

 

இதையடுத்து, அவரை மீட்டு சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே இளம் பெண் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோம்ஸ்டே மற்றும் தனியார் விடுதிகளில் தீ விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுற்றுலா தங்குமிடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.