14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் இனி தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானும் ஆதவ் அர்ஜுனாவும் பரஸ்பர சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர இருவரும் ஒருமனதாகத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாகத் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இருவரும் தற்போது தனித்தனியாகச் செல்ல முடிவு செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. டெய்சி மார்ட்டினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.




கருத்துகள் (0)