காவல் நிலைய சம்பவங்கள் குறித்து திமுக ஐடி விங் விமர்சனம்.. முதலமைச்சரைச் சாடி எக்ஸ் பதிவு!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவமும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், வார இறுதி விடுமுறைக்காகக் காத்திருப்பதிலேயே கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ளது. மேலும், பொதுமக்களின் உயிர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையிலும் விடுமுறையைக் கொண்டாடுவதிலேயே முதலமைச்சர் கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டி, அவரை 'டம்மி CM' எனக் குறிப்பிட்டு கடுமையாகச் சாடியுள்ளது.




கருத்துகள் (0)