22 ஆண்டுகளாக பணிபுரியும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய பிரியங்கா காந்தி!

தனது இல்லத்தில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி நிறைவேற்றியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் நீண்ட நாள் விருப்பமாக இருந்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண் பிரியங்கா காந்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது ஆசையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை பிரியங்கா காந்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று (நவம்பர் 16) நடைபெற்ற சந்திப்பின்போது தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்தி, தனது வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, அந்தப் பெண்ணின் விருப்பப்படி முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் 22 ஆண்டுகளாகத் தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியரின் நீண்ட நாள் ஆசையை பிரியங்கா காந்தி மகிழ்ச்சியுடன் நிறைவேற்றியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)